Friday, 17 May 2013

TAMIL HOME REMEDIES


Paatti vaidhyam

தலைவலிக்கு

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

கைநடுக்கம் தீர

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

சூட்டுக்குத் தைலம்

அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

உடல் எடை கூட

பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

பசி உண்டாக

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.

இரத்த விருத்தி

காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் சுத்த தேன் கலந்து பருகிவர புது இரத்தம் உண்டாகும்

பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இரத்தம் ஊறும்

தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்

சம அளவு பொன்னாங்கண்ணி கீரை,கீழா நெல்லி இலைகளை எடுத்து அரைத்து,அதில் நெல்லியளவு எடுத்து பாலில் தினசரி இரவு அருந்தி வந்தால் இரத்த சோகை குறையும்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

கரிசலாங்கண்ணி இலை மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துப் பாலில் கரைத்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குறையும்.

உடல் குளிர்ச்சி பெற

நெருஞ்சில் விதை , கோதுமை , கொத்த மல்லி , சுக்கு, ஏலம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து சர்க்கரை சேர்த்து அருந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் .வள்ளைக்கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும் அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு காலை/மாலை 2 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வசம்பைக் கரியாக்கி தூளாக்கி துணியில் சலித்து, குளித்தவுடன் குழந்தையின் கால்களின் அடியில், தொப்புளை சுற்றி தடவிவர நோய் அணுகாது.

முகப்பரு குறைய

சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை தடவினால் முகப்பரு குறையும்.

வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

நல்லெண்ணெயோடு மிளகுப்பொடி சேர்த்து முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

மூட்டு வலி

முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.

செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.

வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.

தொப்பையை குறைக்க

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வந்தால் இவ்வாறு 40 நாட்கள் செய்ய வேண்டும்.


Sidha Remedies

ஜலதோஷம்,மூக்கடைப்பு

உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலை ச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக

கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் .

முகத்தின் கருமை நீங்க

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன்,எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

முகத்தில் கரும்புள்ளிகள் போக

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

பொடுகு

வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

தூக்கமின்மை குறைய

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட‌ தூக்கமின்மை குறையும்.

ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.

ஜாதிக்காய் பொடியுடன் ஒரு மேஜைக் கரண்டியளவு நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

கொல்லங்கோவைச் செடியினை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் தூக்கமின்மை குறையும்.

கால் ஆணி

இஞ்சிச் சாற்றுடன் நீர்த்த சுண்ணாம்பை கலந்து போட்டு வந்தால் கால் ஆணி குறையும்.

கீழாநெல்லியை அரைத்து பாதத்தில் தேய்த்து இரவு அப்படியே கட்டிவிட கால் ஆணி குறையும்.

மருதாணி வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி குறையும்.

பித்த மயக்கம் குறைய‌

துத்திக் கீரையை சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்த மயக்கம், வாந்தி போன்றவை குறையும்.

புதினா இலைகளை நீரில் வேக வைத்து, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.

பசலைக்கீரை சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு ஊற வைத்து, பொடியாக்கி சாப்பிட பித்தம் குறையும்.

புளிச்ச கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

சங்கன் இலைப் பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.



Home Remedies

அசீரணம்

கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி, ஜீரணக் கோளாறுக்ள போன்றவை சரியாகும்.

நரைமுடி

வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
குறைபாட்டை நீக்கும் முறைகள்:

1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.
உணவு:
இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.
பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.

ஆடு தின்னாப்பாளை!

வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும். சிலர் ஆடாதொடை மூலிகையை ஆடு தின்னாப் பாளை என்று நினைப்பார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதன் இலைகள் காம்புடன் கூடிய சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன் இருக்கும். ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். இது கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித் தன்மையுடையது. இதனால் இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
வேறு பெயர்கள்: ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.
ஆங்கிலப் பெயர்: Aristolochia bracteata, Retz, Aristolochiaceae.
மருத்துவக் குணங்கள்:

ஆடு தின்னாப் பாளையின் இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.
ஆடு தின்னாப் பாளையின் வேரை அரைத்து 2 வேளை 5 கிராம்வெந்நீரில் சாப்பிட வைத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)
ஆடு தின்னாப் பாளையின் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.
இதன் விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள் நீங்கும்.
ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.
இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.
ஆடு தின்னாப் பாளை இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.
ஆடு தின்னாப் பாளை, பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.
ஆடு தின்னாப் பாளையிலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.
ஆடு தின்னாப் பாளை இலையைப் பொடியாக்கி, புகையிலையில் வைத்து சுருட்டு சுற்றிப் புகை பிடித்தால் சுவாச காசம் குணமாகும்.
ஆடு தின்னாப் பாளை இலை 100 கிராமும், மிளகு 10 கிராமும் எடுத்து அரைத்து மாத்திரைகளாகப் பட்டாணியளவு உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.
ஆடு தின்னாப் பாளைச் சாறு 200 மில்லியளவு, நல்லெண்ணெய் 400மில்லி சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலை முழுகி வர மண்டைக்குத்து, தலைவலி நீங்கும்.
ஆடு தின்னாப் பாளைச் சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.
ஆடு தின்னாப் பாளைவேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.


ஆண்மை அதிகரிக்க

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.


பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்

.முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும்.

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகியநோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்

.முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.
இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.

முடி அடர்த்தியாக வளர

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி அடர்த்தியாக வளரும்
கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி நன்கு வளரும்


கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி நன்கு வளரும்.


இவை தவிர மேற்கூறிய கருவேப்பிலை, காரட், தேங்காய், நெல்லிக்காய் போன்ற உணவுப் பொருட்களை உங்கள் உணவாக உட்கொண்டால் இன்னும் பயனாக இருக்கும்.


மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்


1.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
சளிக் காய்ச்சல்

2.புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

11.தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

12.வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

13.உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

14.அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

15.குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

16.வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

17.வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

18.மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

19.சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

20.பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

21.மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

22.சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

23.தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

24.மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

25.தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

26.மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

27.வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

No comments:

Post a Comment